கரோனாவில் இருந்து குணமடைந்தார் கமல் :

By செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணடைந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்ததால், சென்னை போரூரில்உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், அவர் கரோனா தொற்றில் இருந்துமுழுமையாக குணமடைந்துள்ளார்.

இதுதொடர்பாக போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் சுகாஷ் பிரபாகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கமல்ஹாசன் கரோனா தொற்றில்இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வரும் 3-ம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருப்பார். 4-ம் தேதி முதல் அவர் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்