தமிழகம் முழுவதும் கிளைகள் கொண்ட பிரபல ஜவுளிக்கடை நிறுவனம், வருமான வரி ஏய்ப்புசெய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில், அந்நிறுவன ஜவுளிக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, கோவை,மதுரை, நெல்லை மாவட்டங்களில் உள்ள ஜவுளிக்கடைகள், கடை நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 17 இடங்களில் சோதனை நடந்தது.
சென்னையில் தி.நகர்,புரசைவாக்கம், குரோம்பேட்டை,போரூரில் உள்ள கடைகளிலும், நெல்லையில் பள்ளி நிர்வாகியின்வீட்டிலும் சோதனை நடந்தது.
வரி ஏய்ப்பு, கணக்கில் வராதமுதலீடு அடிப்படையில் சோதனைநடந்ததாகவும், இதில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
மதுரையில்...
இதேபோல, மதுரை பசுமலை அருகே உள்ள தனியார் வணிகநிறுவனத்திலும் நேற்று சோதனைநடந்தது. விசாரணைக்காக சில ஆவணங்களைக் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago