மியான்மர் கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் உட்பட 10 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரில் இருந்து சுபா சீபுட் என்ற விசைப்படகில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, அஜித்குமார், சிவகங்கையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, திருநெல்வேலியைச் சேர்ந்த அருள் அமலன், தூத்துக்குடியைச் சேர்ந்த ஷேக் முஹம்மது, அந்தமான் நிக்கோபர் தீவுகளைச் சேர்ந்த குமார், ஜெயசீலன், ராஜா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுரேந்தர் சர்க்கார், தருண் சர்கார் ஆகிய 10 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏப்.4-ம் தேதி சென்றனர்.
ஏப்.11 அன்று மீனவர்கள் எல்லை தாண்டியதாக மியான்மர்கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 231 நாட்களாக அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுஇருந்தனர்.
இந்நிலையில், மத்திய மீன்வளம் மற்றும் வெளியுறவுத் துறைஅமைச்சகத்தின் முயற்சியால் மீனவர்கள் 10 பேரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
மீனவர்களின் விடுதலைக்காக தெற்கு ஆசிய மீனவப் பேரவை மத்திய, மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் இன்று (டிச.2) டெல்லி வர உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago