முல்லைப் பெரியாறு - அணையின் நீர்மட்டம் குறைப்பு :

By செய்திப்பிரிவு

முல்லைப் பெரியாறு அணையில் மாத வாரியான நீர்மட்ட அட்டவணை (ரூல் கர்வ்) அடிப்படையில் நீர் தேக்கப்படுகிறது. இதன்படி ஜூன் 10 முதல் நவ.30 வரை ஒவ்வொரு 10 நாட்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டு, கடந்த 30-ம் தேதி 142 அடிக்கு உயர்த்தப்பட்டது.

2014-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 4-வது முறையாக நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கேரளப் பகுதிக்கு விநாடிக்கு சுமார் 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து இந்த அளவு அவ்வப்போது அதிகரிக்கப்பட்டது. இந்த நீர் வல்லக்கடவு வழியாகக் கொண்டு செல்லப்பட்டு இடுக்கி அணையில் சேமிக்கப்படுகிறது.

கூடுதல் நீர் வெளியேற்றத்தால், தற்போது அணையின் நீர்மட்டம் 141.6 அடியாகக் குறைந்தது. நேற்று மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து நேற்று மாலை கேரளப் பகுதி மதகுகள் அடைக்கப்பட்டன. தமிழக பகுதிக்கு விநாடிக்கு 2,300 கனஅடி வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 900 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்