சத்ய சாய் சேவா நிறுவனங்களின் இளைஞர் அணி மன்றம் நாடு முழுவதும் நடத்திய 288 ரத்த தான முகாம்களில் 10,418 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை தாக்கத்தால், இந்தியாவில் ரத்த தான முகாம்கள் நடத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், ரத்தத்தின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. போதிய அளவு ரத்தம் இருப்பு இல்லாததால் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவது தாமதம் ஆகின்றன.
இந்நிலையில், சத்ய சாய்பாபாவின் 96-வது ஜெயந்தி விழாகடந்த 23-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் இளைஞர் மன்றம் சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு கடந்த நவ.21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 26 மாநிலங்களில் 288 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 10,418 யூனிட் ரத்தம்சேகரிக்கப்பட்டுள்ளது. தானமாகபெறப்பட்ட ரத்தம், அரசுமருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago