நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - பாமக சார்பில் நவ. 29 முதல் விருப்ப மனு விநியோகம் :

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, பாமக சார்பில் விருப்ப மனு விநியோகம் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமகசார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வரும் 29-ம்தேதி முதல் டிச.3 வரை விருப்பமனுக்கள் பெறப்படும்.

பாமக அமைப்பு ரீதியானமாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, கட்சியின் மாவட்டச் செயலர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள்.

இதற்கு விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி, விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்