கிறிஸ்துமஸ், சபரிமலை சீசனை முன்னிட்டு - கொல்லம், நாகர்கோவிலுக்கு சென்னையில் இருந்து ரயில்கள் :

By செய்திப்பிரிவு

கிறிஸ்துமஸ், சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னையில் இருந்து கொல்லம், நாகர்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.

டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 10, 12, 14-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06007) மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 11, 13, 16-ம் தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு (06008) மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.

சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23-ம் தேதி மாலை 3.30-க்குபுறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06005)மறுநாள் அதிகாலை 4.20-க்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 24-ம்தேதி மாலை 3.10-க்கு புறப்பட்டு (06006) மறுநாள் அதிகாலை 5.20-க்குஎழும்பூர் செல்லும்.

நாகர்கோவிலில் இருந்து டிச. 26இரவு 7.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06004) மறுநாள் காலை 7.55-க்கு தாம்பரம் செல்லும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து டிச.27 மாலை 4 மணிக்கு புறப்பட்டு (06003) மறுநாள்அதிகாலை 4.20-க்கு நாகர்கோவில் செல்லும். இதற்கான முன்பதிவு இன்றுகாலை 8 மணிக்கு தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்