கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவத்தில், பெண் யானையின் வயிற்றில் இருந்த கருவும் சேர்ந்துஉயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட நவக்கரையை அடுத்த மாவுத்தம்பதி ஊராட்சி மொடமாத்தி பகுதியில், நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது மங்களூரில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதியதில் 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
உயிரிழந்த யானைகளின் உடல்கள் கிரேன் உதவியுடன், அருகில்வனத்துறைக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனைநடத்தப்பட்டது. அதில், இறந்தபெண் யானையொன்றின் வயிற்றில் கரு இருப்பது தெரியவந்தது.இதுதொடர்பாக மாவட்ட வனஅலுவலர் டி.கே.அசோக்குமார் கூறியதாவது: இந்தப் பகுதியில்ஏ மற்றும் பி என 2 தண்டவாளங்கள் உள்ளன. பொதுவாகபி தண்டவாளத்தில் அதிக ரயில்போக்குவரத்து இருக்கும். இதில்,ஏ தண்டவாளத்தில் வாளையாறில் இருந்து எட்டிமடைக்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து நிகழ்ந்துஉள்ளது.
ரயில் மோதியதில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு தந்தமில்லாத ஆண் யானை (மக்னா யானை), 6 வயதுடைய ஒரு பெண் யானைஆகியவை 30 மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்த சிறிய ரயில்வே பாலத்தின் கீழே தள்ளப்பட்டிருந்தன. விபத்தில் சிக்கிய 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை சுமார்140 மீட்டர் தொலைவு இழுத்துச்செல்லப்பட்டு, தண்டவாளத்திலேயே உயிரிழந்துவிட்டது.
ஏற்கெனவே வனத்துறை, ரயில்வே துறை இடையே ஏற்பட்டஉடன்பாட்டின்படி அனுமதிக்கப்பட்ட கி.மீ வேகத்தில்தான் ரயில்இயக்கப்பட்டதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் எப்படி நடந்தது? ஏன் விபத்தை தவிர்க்க முடியவில்லை? என ஓட்டுநரிடம் விசாரணை நடைபெறுகிறது. அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல்வேகத்தில் ரயில் இயக்கப்பட்டிருந்தால், அந்த விதிமீறலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago