நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் நவ.26 முதல் 29-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகங்களில் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை மாவட்டச் செயலாளர்கள் நேற்று தொடங்கி வைத்தனர்.
சென்னையில் 9 மாவட்ட அலுவலகங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வாங்கினர். மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பத்துக்கு ரூ.5 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago