கோவளம் கடற்கரையில் கடற்படைலெப்டினென்ட் கமாண்டர், கடலில்குளித்தபோது நீரில் முழ்கி உயிர்இழந்தார். அவரது உடல் மாமல்லபுரம் அருகே நேற்று கரை ஒதுங்கியது.
டெல்லி கடற்படை தலைமை அலுவலகத்தில் லெப்டினென்ட் கமாண்டராக பணிபுரிந்தவர் சுரேஷ். இவருக்கு திவ்யா(31) என்ற மனைவியும் மற்றும் செளபர்ணிகா(8) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவர், செங்கைமாவட்டம், துரைப்பாக்கத்தில் உள்ள மாமனார் இல்லத்தில் சிலநாட்களாக விடுமுறையில் தங்கிஇருந்ததாகத் தெரிகிறது. பின்னர்,நேற்று முன்தினம் கோவளம் பகுதியில் கடற்கரையையொட்டிஉள்ள உறவினர் இல்லத்தில்தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கடற்கரையை மனைவி, மகள் மற்றும் உறவினர்களுடன் சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது, கடலில் குளித்தசுரேஷ் அலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்த உறவினர்கள் கூச்சலிட்டனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாரும் காப்பாற்ற வரவில்லை.
தீயணைப்புத் துறையினர் மற்றும் கடற்படையினர் கப்பல்,ஹெலிகாப்டர் மூலம் அவரைதேடும் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, நேற்று பிற்பகல்அவரது உடல் மாமல்லபுரம் அருகேஉள்ள தேவனேரி கடற்கரையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்தமாமல்லபுரம் மற்றும் கேளம்பாக்கம் போலீஸார் அவரது உடலைமீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
கடற்படையைச் சேர்ந்த லெப்டினென்ட் கமாண்டர், குடும்பத்தினர் கண் முன்னே கடலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago