தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றுசட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாம்பரம்நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக ஆளுநர் கடந்த5-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து தாம்பரம்நகராட்சி ஆணையராக இருந்த இரா.லெட்சுமணன் கூடுதல் பொறுப்பாக ஆணையர் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த இளங்கோவன் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக 24-ம் தேதி பணிமாற்றம் செய்யப்பட்டார்.தாம்பரம் மாநகராட்சியின் முதல்ஆணையராக இளங்கோவன் நேற்று மாலை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago