நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்.24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் (50) கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில், சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கின் மறு விசாரணைக்காக டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலீஸார் நீலகிரியில் வைத்து விசாரித்தனர்.
தொடர்ந்து, நேற்று அவரை கோவைக்கு அழைத்துச் சென்று அவிநாசி சாலையில் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை வரை நீடித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago