அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் டிச. 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வரும் டிசம்பர் 1-ம் தேதி காலை 10 மணி அளவில், கட்சியின் செயற்குழுக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கட்சி யின் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக செயற்குழுஉறுப்பினர்களுக்கு தனியே அழைப்பிதல் அனுப்பிவைக்கப்படும். உறுப்பினர்கள் அழைப்பிதழுடன் வந்து, கரோனாதடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இக்கூட்டத்தில்கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago