அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த பிலிச்சுக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன் (35). இவர், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அங்கு தலைமையாசிரியையாக பணியாற்றி வரும் அரியலூரைச் சேர்ந்த ராஜேஸ்வரியிடம்(53), அந்த மாணவி புகார் அளித்துள்ளார். இதைஅடுத்து, அருள்செல்வனையும், மாணவியையும் அழைத்துப் பேசிய ராஜேஸ்வரி, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அனைத்து மாணவிகளின் பெற்றோரும் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த அரியலூர் டிஎஸ்பி மதன் நேரில் சென்று விசாரித்தார். தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் அருள்செல்வனையும், சம்பவத்தை மறைக்க முயன்றதாக தலைமையாசிரியை ராஜேஸ்வரியையும் போலீஸார் கைது செய்தனர்.
ஏற்கெனவே, அப்பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவிக்கும் அருள்செல்வன் பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago