நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட - காங்கிரஸார் டிச.1 முதல்விருப்ப மனு அளிக்கலாம் :

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் டிச.1-ம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். விருப்ப மனுவுடன் பொதுப் பிரிவினர் ரூ.1,000, பட்டியலினத்தவர், மகளிர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அன்றைய தேதியில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாநிலத் தலைமையால் நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்கள் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு வழங்கலாம். இதை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக் கொள்வார்கள் என்று கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்