கோயில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்போரிடம் சொத்து விவரங்களை கேட்க உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெல்லையைச் சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவின் விவரம்:
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் பதவிக்கு தகுதிஉள்ளவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு விண்ணப்பிப்போரிடம் அவர்களின் சொத்து விவரங்கள் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பிரமாணப் பத்திரங்கள் பெறவும், அந்த பிரமாணப் பத்திரங்களை அனைவரும் பார்க்கும் வகையில் அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அரசு தரப்பு எதிர்ப்பு
இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், "அறங்காவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்தால் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க யாரும் முன்வர மாட்டார்கள். அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்போரிடம் தேவையான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்கவேண்டியதில்லை" எனவாதிடப்பட்டது.இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago