மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது :

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதையடுத்து, நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்தது.

தற்போது, மழை குறைந்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணியளவில் 45 ஆயிரம் கனஅடியாகவும், மதியம் 1 மணியளவில் 30 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது.

அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்