மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: விவசாயிகளின் தொடர் போராட்டத்தாலேயே மோடி அரசு பணிந்துள்ளது. 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த முடிவை எடுத்துள்ளது.
இப்போராட்டம் முழுக்க கட்சி சார்பற்ற விவசாய சங்கங்களைச் சேர்ந்தது என்ற முறையில் நாங்கள் ஆதரித்தோம். இருப்பினும் இந்த வெற்றிக்கு பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தாகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளே உரிமையாளர்கள்.
இப்போராட்டத்தில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். அதற்கு தலித் மற்றும் பழங்குடியினத்தவர்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க வேண்டும். இதையெல்லாம் மத்திய அரசு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago