ஆதிச்சநல்லூரில் திறக்கப்பட்ட - முதுமக்கள் தாழிக்குள் மனித மண்டை ஓடு, எலும்பு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கனிமொழி முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழியில், மனிதனின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்தன.

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்.10-ம் தேதி மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த அகழாய்வில் ஏற்கெனவே 12 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாழியைத் திறந்து, உள்ளிருக்கும் பொருட்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்தனர்.

தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஆட்சியர் செந்தில் ராஜ் முன்னிலையில் நேற்று அந்தத் தாழி திறக்கப்பட்டது. அதற்குள் மனிதமண்டை ஓடு, கால் எலும்பு, சிறுபானைகள் இருந்தன. தாழிக்குள்இருந்த பானைகளில் தானியங்களும், ஆயுதங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய தொல்லியல் துறைதிருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்