பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் 13 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் கூறியது:கள்ளக்குறிச்சி மாவட்டம்சி ன்னசேலம் அருகே பெரிய சிறுவத்தூர்கிராமத்தில் ஜெயந்தி என்பவர்கடந்த பிப்.14-ம் தேதி வீட்டில் தூங்கியபோது மர்ம நபர் ஒருவர்புகுந்து, 5 பவுன் செயின், அவர்மகள் ராஜேஸ்வரி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றார்.இதேபோல அம்மையரகத்தில் விசாலாட்சி(72) என்பவர் வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு, ஜன.12-ல் 400 கிராம் வெள்ளி பொருள், ரூ.25 ஆயிரம் திருடப்பட்டன.
விசாரணையில், பழைய குற்றவாளிகள் கை ரேகையோடு, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரின் கை ரேகை ஒத்துப் போனது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் ஜெயந்தி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
கெங்கராம்பாளையத்தில் வசிக்கும் தஞ்சாவூர், மனோஜ்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ்(35), விசாலாட்சி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் தர்மராஜுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட அவரது சகோதரர் சக்திவேல்(31) என்பவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
சின்ன சேலம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம் பகுதிகளில் இவர்கள் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். 13 வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் 3 பேரிடமிருந்து சின்ன சேலம் நகைக்கடைகளில்25 பவுனும், கள்ளக்குறிச்சி நகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 13 பவுனும் மீட்கப்பட்டது. சின்ன சேலம் போலீஸார் இவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபரமசிவம், அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago