கனமழையால் பாதிக்கப்பட்ட - டெல்டா பகுதிகளில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆய்வு :

By செய்திப்பிரிவு

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், விளைநிலங்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எருக்கூர், பூம்புகாரை அடுத்த தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை இருவரும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அதன் பின்னர், நாகை மாவட்டம்கீழையூர் ஒன்றியம் திருக்குவளை, கருங்கண்ணி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ராயநல்லூர் கோட்டகம், புழுதிகுடி சிதம்பரம் கோட்டகம், தஞ்சாவூர் மாவட்டம் சொக்கணாவூர் ஆகிய பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்