பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசைக் கண்டித்து மேலூரில் ஒருபோக பாசன விவசாயிகள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 60 கிராமங்களை உள்ளடக்கிய வெள்ளலூர் பகுதி உள்ளது. இப்பகுதி விவசாயிகள் பெரியாறு அணை நீரை நம்பி உள்ளனர். இந்நிலையில் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கவிடாமல் 138 அடி எட்டியதும் தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர், எம்எல்ஏக்கள் இன்றி அணையைத் திறந்து, வீண் வதந்திகளை பரப்பும் கேரள அரசைக் கண்டித்தும், அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்க வேண்டும். பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மேலூர் பகுதி ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன்படி, 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. வர்த்தகர்கள், வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர், விவசாயிகள், விவசாய சங்கத்தினர் தங்களது குடும்பத்தினருடன் சுமார் 500 வாகனங்களில் மேலூருக்கு வந்தனர். மேலூர் பென்னிக் குக் பேருந்து நிலையம் முன்பு காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயயிகள், வணிகர்கள், என ஏராளமானோர் பங்கேற்றனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago