தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் - சாகுபடி கொள்கையில் மாற்றம் செய்ய பரிந்துரைக்க வேண்டும் : முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நவ.14-ல் திருப்பதியில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில், தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த ஒருமித்த கருத்தை உருவாக்க முன்வர வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக மதித்து செயல்படுவதற்கான நடவடிக்கையை உறுதிப்படுத்த தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். தமிழகத்துக்கான நீர் ஆதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முழு ஒத்துழைப்பு வழங்க மற்ற மாநிலங்களை தமிழகம் கோர வேண்டும்.

மத்திய அரசு ராபி, காரீப் என இரு பருவகால சாகுபடி கொள்கைகளை இந்தியா முழுவதும் நிறைவேற்றி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் முதல் வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வேளையில், முதல் காரீப் பருவ சாகுபடி (கோடை பருவம்) அமல்படுத்தப்படுகிறது. இது பொருத்தமற்றது என்பதை மத்திய அரசுக்கு எடுத்துரைத்து, தமிழக பருவ காலத்துக்கேற்ப கொள்கை மாற்றம் காண வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையின் அழிவே பருவநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. எனவே, தென் மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய பகுதியில் மரங்களை வளர்த்து வனப்பரப்பை விரிவுபடுத்துவதற்கும், இயற்கை வளங்கள், வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்க தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்