கரோனா காலத்தில் இடைநின்ற 1.28 லட்சம் பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு :

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில்நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களைத் தேடி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும்.

'இல்லம் தேடி கல்வி' திட்டம் முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் 2 வாரங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் வரப்பெறும் கருத்துகள், நடைமுறை சிக்கல்கள் போன்றவற்றை ஆய்வு செய்து, அவை களையப்பட்டு, மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தக் கல்வித் திட்டம் திராவிட திட்டம் என்று முதல்வரே கூறியுள்ளார். எனவே, இதில் எந்த அமைப்பினரும் உள்ளே வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்