சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு - அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மரியாதை :

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் ராமநாதபுரம், மதுரை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவரது சிலைக்கு கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை நந்தனத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசு சார்பில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், டிஆர்.பாலு எம்.பி.,அமைச்சர்கள் ரகுபதி, தா.மோ.அன்பரசன் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி,எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி, அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர் தலைமையில் அக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்குஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டுதலைவர்கள் கூறியுள்ளதாவது:

முதல்வர் ஸ்டாலின்: ‘நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல’ என்று வாழ்ந்தவர் தேவர்திருமகனார். அவரது முத்துமொழிகளைப் பின்பற்றி நடப்பதேஅவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: ‘ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்’ என்று கூறிய தேவர் பெருமகனார் ஜெயந்தி இன்று. தேசத் தொண்டு – தமிழ்த்தொண்டு – சமயத் தொண்டு – அரசியல் தொண்டு என எல்லாவற்றிலும் ஒரு சேர பயணித்து மக்களுக்காக குரல் கொடுத்த அவரை வணங்கிப் போற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்