சங்கராபுரம் பட்டாசுக் கடை விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், அதன் கடை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் நடத்தி வந்த பட்டாசுக் கடையில் கடந்த 26-ம் தேதி இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அந்தக் கடை மற்றும் அருகில் பேக்கரி கடை உள்ளிட்டகட்டிடங்கள் இடிந்து, 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும் உரிமையாளர் செல்வகணபதி உள்ளிட்ட 11 பேர் விபத்தில் காயமடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சங்கராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் அளித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதிக அளவில் வெடிபொருட்கள்
இதைத் தொடர்ந்து பட்டாசுக் கடை உரிமையாளர் செல்வகணபதி மீது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் பாதுகாப்பின்றி வைத்திருத்தல், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை வெடிக்கும் என அறிந்திருந்தும் வைத்திருத்தல், தீ பற்றியதால் ஏற்பட்ட விபத்து, தீ விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக வெடி பொருட்களை இருப்பு வைத்திருத்தல் ஆகிய 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago