சசிகலா விவகாரத்தில் அனைவரையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றுதான் ஓபிஎஸ் கூறினார், அதில் என்ன தவறு இருக்கிறது?, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் தவறேதும் இல்லை, என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர் நாளை (அக்.30) வருகை தர உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டி ஆட்சியர் அனீஸ் சேகரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று மனு அளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ‘சசிகலா விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கருத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் கருத்துக்கும் முரண்பாடு உள்ளதே?’ என்று கேள்வி எழுப்பினர்.
சர்ச்சையே இல்லை
அதற்கு செல்லூர் கே.ராஜூ, ‘‘சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்குள் சர்ச்சையே கிடையாது. பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும்.சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துச்சொன்ன பிறகு இணை ஒருங்கிணைப்பாளர் கருத்துச் சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது? ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் தவறு எதுவும் இல்லை.உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்றுதான் ஓ.பி.எஸ். சொன்னார். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால் பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.அந்த கருத்துகளை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago