பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - கடலூர் திமுக எம்பி-க்கு நவ.9-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு :

பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த, கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் ரமேஷூக்கு வரும் 9-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் மக்களவை உறுப்பினர், ரமேஷூக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர் கோவிந்தராஜ் கடந்தசெப்டம்பர் 17-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணைமேற்கொண்டனர். கடந்த 9-ம்தேதியன்று எம்பி ரமேஷ்உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் எம்பி ரமேஷ் சரணடைந்தார். நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து அவர் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 13-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை விசாரணைக்கு எடுத்து சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ரமேஷ் ஜாமீன் கோரிய மனுவை கடந்த 24-ம் தேதி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்துநேற்று கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரமேஷை போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிரபாகர், ரமேஷ் எம்பி.யை வருகிற நவம்பர் 9-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். போலீஸார் அவரை மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்