நகர்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தலுக்கு வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தலும் வரலாம், மறைமுகத் தேர்தலும் வரலாம் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

திருப்பத்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மருதுபாண்டியர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை வாழ்நாள் கடமையாகச் செய்து வருகிறோம். முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மருதுபாண்டியர்களின் படத்தை சட்டப் பேரவையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் குறித்த நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தலும் வரலாம், மறைமுகத் தேர்தலும் வரலாம் என்றார். முன்னதாக மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்