மறைவுக்கு பிறகும் மனிதனை விடாத சாதி : உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

மரணத்துக்குப் பிறகும்கூட சாதி மனிதனை விடவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ஏரிபட்டியை சேர்ந்தவர் அமிர்தவல்லி. இவர் தங்களுக்கு சொந்தமான நிலத்துக்கு செல்லும் வழியில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் உடல்களை தகனம் செய்ய தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்தவழக்கு விசாரணை நடந்தது.

அப்போது, பட்டியலின சமுதாயத்தினர், அந்த மயானத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படாததால் சாலையோரங்களில் உடல்களைஎரிக்கும் நடைமுறையை பின்பற்றி வருவதாகதெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “மரணத்துக்குப் பிறகும்கூட சாதி மனிதனை விடவில்லை என்பதுதுரதிர்ஷ்டவசமானது” என்று வேதனை தெரிவித்தார். “மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரது உடல்களையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதைதடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்தார். அறிவிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்