மதிமுகவை விட்டு சிலர் வெளியேறுவதால் கட்சி பிளவுபடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதுரை அவனியாபுரம் அருகே மறைந்த மதிமுக நிர்வாகி கதிரேசனின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்க வந்த வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சியின் தலைமைக் கழகச் செயலராக துரைவைகோ தேர்தல் நடத்திமுறைப்படிதான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். வாக்கெடுப்பு பெட்டி வைத்து 106 பேர் பங்கேற்றதில் 104 பேர் வாக்களித்தனர்.
நான் பொதுச் செயலாளர் என்ற முறையில் நேரடியாக அவரை நியமித்திருக்கலாம். ஆனால், முறைப்படி தேர்தல் மூலம்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில் நடந்துஉள்ளது. கட்சித் தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவருக்குஉரிய பதவி வழங்க வேண்டும் என மாவட்டச் செயலர்கள் கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தனிப்பட்ட முறையில் துரை வைகோ அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லைதான். ஆனாலும், அவரது வருகையைகட்சியினர் வரவேற்கின்றனர். விமர்சனங்கள் அரசியலில் சகஜம். தனிப்பட்ட முறையில் என்னையும் விமர்சனம் செய்கின்றனர். சில பேர் கட்சியை விட்டுசெல்வதால் கட்சி பிளவுபடும் எனக் கூற முடியாது. கட்சி வலுவாகவே உள்ளது.உத்தரப்பிரதேச விமானநிலையத்துக்கு ராஜபக்சேவருவதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் அங்கு நேரடியாக செல்ல முடியவில்லை.
நவ.1-ம் தேதி லண்டனுக்குச் செல்லும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சொல்லி அங்குள்ள தமிழர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடக்கிறது. தவறுசெய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago