கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி. எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இங்கு பணியாற்றிய மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(55) என்பவர் கடந்த மாதம் 19-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கோவிந்தராஜ் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 8-ம் தேதி திமுக எம்பி ரமேஷ் மற்றும் 5 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து முந்திரி ஆலையில் பணிபுரிந்தஎம்.பியின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி எம்பி ரமேஷ் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை கடலூர்கிளை சிறையில் அடைத்தனர். சிபிசிஐடி விசாரணைக்கு ஒருநாள் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று எம்பி ரமேஷுக்கு ஜாமீன் கேட்டு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் சிவராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago