தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்தார். ராஜ்பவனில் குடும்பத்தினருடன் தங்கியுள்ள ஆளுநர், நேற்று முன்தினம் அப்பர்பவானி அணைக்கு சென்றார். மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் அணையை கண்டு ரசித்தார். அணை பராமரிக்கப்படும் விதம், தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவு, மின் உற்பத்தி செய்யப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் காரில் இருந்தபடி கோரகுந்தா, தாய்சோலை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களை பார்வையிட்டார்.
நேற்று தனது குடும்பத்தினருடன் உதகையில் இருந்து குன்னூருக்கு மலை ரயிலில் ஆளுநர் பயணித்தார். பின்னர், கார் மூலம் உதகைக்கு திரும்பினார். மாலையில் உதகை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றை நட்டார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். ஆளுநர் உதகையில் இருந்து நாளை சென்னைக்கு திரும்புகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago