நீலகிரி மாவட்டத்தில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நேற்று மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் மசின குடியின்கவுரி, தேவன் எஸ்டேட் பகுதியில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன், சிங்காரா வனப்பகுதியில் பசுவன் ஆகியோர் டி.23 என வனத்துறையினரால் அழைக்கப்படும் புலியால்அடித்துக் கொல்லப்பட்டனர். இதைஅடுத்து, புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
22 நாட்களாக புலியை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு புலியைப் பார்த்த வனத்துறையினர், புலிக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தினர். ஆனால், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கி தப்பியது. இந்நிலையில், நேற்று மதியம் மாயார் வனத்தில் கூற்றுப்பாறை பகுதியில் நடமாடிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர்.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘நேற்று மதியம் புலி மாயார் சாலையில் நடமாடுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது அங்குள்ள புதரில் புலி சென்றது. புதரைச் சுற்றி வளைத்த வனத்துறையினர், புலி வெளியில் வரும் வரை காத்திருந்தனர். புதரை விட்டு வெளியே வந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. புலி மயக்கமடைந்ததும் அதை வலைகள் கொண்டு கட்டி,கூண்டில் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மயங்கிய நிலையில் பிடிபட்ட புலிக்கு உரிய சிகிச்சைஅளிக்கப்பட்டு அதை பராமரிப்பது பற்றி திட்டமிடப்படும் என்றனர்.
அமைச்சர் பார்வையிட்டார்
மசினகுடியில் பிடிபட்டுள்ள டி.23 புலியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பார்வையிட்டார். பின்னர், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பிடிபட்ட புலிக்கு 4 மருத்துவர்கள் அடங்கிய குழு சிகிச்சைஅளித்து, மைசூரு உயிரியியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்துக்கு புலியை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago