மேட்டூர் அணை நீர்மட்டம் : ஒரே நாளில் 2 அடி உயர்வு :

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்ந்து 85.17 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து விநாடிக்கு 28,394 கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்துகாவிரியில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும்காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ளமழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 19 ஆயிரத்து 68 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 28 ஆயிரத்து 394 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 650 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், நேற்று முன்தினம் 82.92 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்ந்து நேற்று 85.17 அடியானது. நீர் இருப்பு 47.30 டிஎம்சியாக உள்ளது. அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்