ஸ்டெர்லைட் ஆலையை திறக்க - 21 கிராம மக்கள் கனிமொழியிடம் மனு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கனிமொழி எம்.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் சிப்காட் வளாகத்தை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும்விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. கனிமொழி எம்.பி. மரக்கன்றுகளை நட்டுவைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது கனிமொழி எம்.பி.யை தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏ.குமரெட்டியாபுரம், மீளவிட்டான், மடத்தூர், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், அய்யனடைப்பு, சோரீஸ்புரம், சில்லாநத்தம், தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, ராஜாவின் கோயில், சாமி நத்தம், சில்வர்புரம், புதூர் பாண்டியாபுரம், காயலூரணி, நயினார்புரம் உள்ளிட்ட 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், “தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 21 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 21 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெறும் வகையில் உடனடியாக ஸ்டொ்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்