புதிய பிளாஸ்டிக் ஆலைகளுக்கு அனுமதி இல்லை :

By செய்திப்பிரிவு

சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டம்திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலத்தில் நேற்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

நகர்புறங்களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளதால், புதிய பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும்,3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டமானது பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உள்ளது. 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு வந்தாலும் அண்டை மாநிலங்களில் இருந்து உள்ளே வந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என மக்கள் மனதளவில் மாற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்