கரூர் அருகே தேங்கிய நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு : மற்றொரு சம்பவத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, 2 மகன்கள் மரணம்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம், புனவாசிப்பட்டி சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காசிராஜன் மகன் நவீன்குமார்(13), ஆறுமுகம் மகன்கள் வசந்த்(13), கவின்(12). நவீன்குமார், வசந்த் 8-ம் வகுப்பும், கவின் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இவர்கள் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்குள்ள மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அந்தப் பள்ளத்தில் இறங்கிய ஆடுகள் நீரில் சிக்கியதால், அவற்றை மீட்பதற்காக நவீன்குமார்,வசந்த், கவின் 3 பேரும்அதில் இறங்கி உள்ளனர். இதில் 3 பேரும் நீரில் மூழ்கிஉயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள்தண்ணீருக்குள் இறங்கி 3பேரின் உடல்களையும் மீட்டனர். லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

காப்பாற்ற முயன்றபோது..

திண்டுக்கல் அருகே செட்டியபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் திருப்பதி(45).இவர் நேற்று காலை ஈரமானதுண்டை கொடியில் காயப்போட்டபோது, மின்கசிவு ஏற்பட்டு கொடிக் கம்பியில் மின்சாரம் தாக்கியதால் அலறி துடித்தார்.

தந்தையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மகன்கள் விஜய்கணபதி(12), சந்தோஷ்குமார்(9) ஆகியோர் தந்தையை காப்பாற்ற முயன்றுஅவரைத் தூக்கி உள்ளனர்.ஆனால், அடுத்தடுத்து இருவர்மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் முருகன், இவரதுமனைவி சூர்யா ஆகியோர்ஓடிவந்து காப்பாற்ற முயன்றபோது தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த தம்பதியினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருப்பதியின் மனைவி வெளியே சென்றிருந்ததால் தப்பியுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் உயிர்இழந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்