சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய்புதூர் பகுதியில் ஊறுகாய் நிறுவனம் நடத்திவரும் முகமது ஜானிடம் மேலாளராக ராஜா என்ற ராஜேந்திரன் (31) பணிபுரிகிறார். இவர், அந்நிறுவனத்தின் காசாளர் சக்கரவர்த்தியுடன் (28) நேற்று சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காரை கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், பிரம்மதேசம் மற்றும் மேல்மலையனூரில் தர்பூசணி, வெள்ளரி பயிரிடும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்காக இவர்கள் வந்துள்ளனர்.
அதற்காக நேற்று காலை திண்டிவனம் அருகே பெருமுக்கம் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் முகக்கவசம் அணிந்த 2 பேர் வந்து, காரை வழிமறித்தனர். அவர்களை பின் தொடர்ந்து 3 பைக்குகளில் 6 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து காரின் கண்ணாடியை உடைத்து, மூவரின் கழுத்தில் கத்தியை வைத்து, ரூ.30 லட்சம் பணம் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து விழுப்புரம் எஸ்பி நாதா, திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மற்றும் பிரம்மதேசம் போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர். மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago