வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.2.27 கோடி மதிப்பிலான 5.69 டன் செம்மரக் கட்டைகளை தூத்துக்குடியில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மத்திய வருவாய் புலனாய்வுத் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள், தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர்.
அந்த வழியாக வந்த சரக்குப் பெட்டக லாரியை சோதனை செய்ததில், பருத்தி மூட்டைகளுக்கு நடுவே செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. லாரியில் இருந்து 5.69 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.2.27 கோடி.
அவை, ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதும், தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொழும்புக்கு கடத்திச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஜார்ஜ் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago