இழந்த வாழ்வாதாரத்தை மீட்க - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கிராம மக்கள் மனு

By செய்திப்பிரிவு

இழந்த வாழ்வாதாரத்தை மீட்கஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு கிராம மக்கள்தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள சாமிநத்தம், புதூர் பாண்டியாபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாலையாபுரம், சுப்பிரமணியபுரம் மற்றும் தூத்துக்குடி மாதா கோயில் பகுதி, பாத்திமா நகர் பகுதி மக்கள் நேற்று தனித்தனியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

ஸ்டெர்லைட் ஆலையால் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டுள்ளதால், வெளியூர் சென்று வேலை செய்யும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளோம். அங்கேயும் போதிய ஊதியம் கிடைக்காததால் வறுமையில் உள்ளோம்.

ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது. குறிப்பாக, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்தி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதில்லை. மேலும், திருமணஉதவித் தொகை, பெண்களுக்கு வேலைவாய்ப்பு, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கோயில்களை சீரமைக்க நிதியுதவி என, பல்வேறு உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்துவந்தது.

சிலரது தவறான கருத்துகளால் ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால், எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலைதொடர்ந்தால் நாங்கள் மீண்டு வருவது சிரமம். இழந்த எங்கள்வாழ்வாதாரத்தை மீட்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்விநியோகம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்