ஆண்டிபட்டி - தேனி இடையே அகல ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
போடி - மதுரை மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி ரூ.450 கோடி மதிப்பில் 2011-ல் தொடங்கியது. 90 கி.மீ. தூரம் உள்ள இப்பாதையில் மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி என்று 4 கட்டங்களாகப் பணிகள் நடைபெறுகின்றன. ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை கடந்த மாதம் 4-ம் தேதி ரயில் இன்ஜினை 90 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று ரயில் இஞ்சினை 120 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அடுத்ததாக முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் தலைமையில் பெட்டிகளுடன் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படும். அதன் பிறகே இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும். தேனி - போடி இடையிலான பணி வரும் டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago