செப்.27-ல் நடைபெறவுள்ள அகிலஇந்திய பொது வேலை நிறுத்தத்தின்போது, தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் வே.துரைமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ எஸ்.குணசேகரன், அகிலஇந்திய விவசாயிகள் போராட்டக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் 10-வது மாதமாக விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், செப்.27-ம் தேதி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் செய்ய அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை தமிழகத்தில் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம்.
இப்போராட்டத்துக்கு, அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் மற்றும்பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும். இதற்காக மாநில, மாவட்ட நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக பிரச்சார இயக்கங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago