இந்திய தயாரிப்பு விண்கலமான `ககன்யான்’ மூலம், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் உதவியுடன் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டுக்கான திரவ எரிபொருள் சோதனை நேற்று மதியம் 1.10 மணி அளவில் தொடங்கி, 750 விநாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago