கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்துடன் இலங்கை ராணுவம் கூட்டு வைப்பதால் பேராபத்து ஏற்படும் என்ற தலைப்பில் நேற்று (ஆக.18) ‘இந்து தமிழ்’ நாளிதழில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்ட அறிக்கை பிரசுரமானது.
இதுதொடர்பாக கோத்தாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் நேற்று அளித்த விளக்கக் கடிதத்தில், மேற்காணும் செய்தியில் கோத்தாரி சர்க்கரை ஆலையின் நிர்வாகத்தை தொடர்புபடுத்தி பி.ஆர்.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் எவ்வித முகாந்திரமும் இல்லை.
கோத்தாரி சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் செயல்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. இதற்கு ஆலை நிர்வாகம் தீர்க்கமாக தனது மறுப்பை தெரிவிக்கிறது எனஅந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago