திருச்சி கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட் டது.
கரோனா ஊரடங்கு தளர்வைஒட்டி கல்லூரிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, திருச்சி கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் 600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாணவிகள் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், ஒரு மாணவி, தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், மற்றொரு மாணவி, திருச்சி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கல்லூரிதுணை முதல்வர் ஹர்சியா பேகம் கூறியதாவது: கல்லூரி திறக்கப்படுவதையொட்டி கடந்த 3 நாட்களுக்கு முன்பிருந்தே மாணவ,மாணவிகள் கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதையடுத்து, கல்லூரியில் பயிலும் மாணவ -மாணவிகள் 600 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago