தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த அதிமுக அரசு,தேர்தலுக்கு முன்பாக பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து, ரூ.4,803 கோடி ஒதுக்கியது. இதை ஆய்வு செய்ததில், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது தெரியவருகிறது.
பயிர்க்கடனில் முறைகேடு
இந்த திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, சில மாவட்டங்களில் அதிக அளவில் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டன. கடன் வழங்கியதிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன.மத்திய கூட்டுறவு கடன் சங்கங்களின் அனுமதியின்றி, சிலதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்கியுள்ளன. மேலும், விவசாய நகைக்கடன்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம் மற்றும்தூய்மை சரியாக கணக்கிடப்படவில்லை. பயிர்க் கடன் தள்ளுபடியை தொடர்ந்து அனுமதித்தால், தவறு செய்தவர்கள் பலனைப் பெறக்கூடும். எனவே, முறைகேடுகள் தொடர்பாக தீர ஆராய்ந்த பின்னர், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
எனினும், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், தகுதியான குழுக்களுக்கே சென்றடைந்துள்ளன. அதுமட்டுமின்றி, கரோனா தொற்றுகாலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக, அந்தசங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதி வழங்கும் நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago