கரோனா காரணமாக கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15-ம் தேதிகிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் ஜனவரி 26,மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். கடந்த 2020-ல் குடியரசு தினத்தன்று கிராம சபை நடத்தப்பட்டது. அதன்பிறகு கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவில்லை. அக்.2-ல் கிராம சபை கூட்டம்நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டபோதும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதே நேரம், திமுக சார்பில் ஆங்காங்கே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டும் கரோனா பரவல்காரணமாக ஜனவரி 26, மே 1-ல்கிராம சபை கூட்டம் நடக்கவில்லை. தற்போது, 3-வது அலையின் தாக்கம் இருக்கக்கூடும் என்பதால், மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே,வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்கள், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago