ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்வி :

By செய்திப்பிரிவு

புவி கண்காணிப்பு, பேரிடர் மீட்புபணிகளுக்காக இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்தது. திட்டமிட்டபடி ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக் கோளை சுமந்தபடி, ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட்நேற்று காலை 5.43-க்கு விண்

ணில் ஏவப்பட்டது.

புறப்பட்ட 5 நிமிடம் 55 விநாடிகளில் ராக்கெட்டின் முதல் 2 நிலைகள் எரிந்து பிரிந்தன. அதுவரை சீரான வேகத்தில் சென்ற ராக்கெட்டின் இறுதி நிலையான கிரையோஜெனிக் இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், திசைமாறிய ராக்கெட், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் உடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, இத்திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்தது. இதுகுறித்து ஆய்வுசெய்ய உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்