பல்வேறு செயல்பாடுகள் அடிப்படையில், சிறப்பான உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் முதலமைச்சரின் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து நகராட்சிநிர்வாகச் செயலர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணை:
இந்த ஆண்டின் சிறந்தமாநகராட்சிக்கான விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு, விருது மற்றும் ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
அதேபோல, சிறந்தநகராட்சிக்கான முதல் பரிசுக்கு உதகை நகராட்சி,2-ம் பரிசுக்கு திருச்செங்கோடு நகராட்சி, 3-ம் பரிசுக்கு சின்னமனூர் நக ராட்சி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு முதலமைச்சர் விருதும், முறையே ரூ.15 லட்சம், 10 லட்சம், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும்.
இந்த விருதுகள் மற்றும் பரிசுத் தொகைகளை சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago